என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏ.டி.எம். கார்டு"
- தன் கைப்பையில் வைத்திருந்த 3 ஏ.டி.எம். கார்டுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- தாமதமாக கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இது குறித்து, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கமலாம்பாள் வீதியைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சங்கீதா (வயது 37). இவர், கடந்த 10-ந் தேதி கும்பகோணத்திற்கு பஸ்சில் சென்று விட்டு, அன்று மாலை திருநள்ளாறு திரும்பி கொண்டிருந்தார். வீடு சென்று பார்த்தபோது, தன் கைப்பையில் வைத்திருந்த 3 ஏ.டி.எம். கார்டுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து, குறிப்பிட்ட வங்கிக்கு சங்கீதா சென்று கார்டை பிளாக் செய்ய சொல்லியதாக கூறப்படுகிறது. ஆனால், அன்றைய தினமே, ரூ.40 ஆயிரம், 11-ந் தேதி ரூ.40 ஆயிரம், 12-ந் தேதி ரூ.40 ஆயிரம், 13-ந் தேதி ரூ.40 ஆயிரம் என 4 நாட்கள் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் எடுத்ததாக சங்கீதாவின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை தாமதமாக கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இது குறித்து, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்வி தனது ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து வர இசக்கிதுரையை அனுப்பி வைத்தார்.
- பின்னால் நின்ற நபர் ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தர கூறி உள்ளார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி கிராமம் கண்ணப்பர் தெருவில் வசிப்பவர் செல்வி. இவர் தனது ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து வருவதற்காக புதிய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஏ.டி.எம் சென்று வருமாறு தனது அண்ணன் மகன் இசக்கிதுரையை அனுப்பி வைத்தார்.
அங்கு சென்று அவர் பணம் எடுத்தபோது, அவரது பின்னால் நின்ற நபர் அவரது கார்டு ரகசிய எண்ணை தெரிந்து வைத்துக்கொண்டு, ஒன்றும் தெரியாதது போல ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறி உள்ளார். அப்போது 2 பேரின் கார்டு களும் தவறி கீழே விழுந்ததும், மர்ம நபர் இசக்கிதுரையின் கார்டை மாற்றி எடுத்து விட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அந்த கார்டில் இருந்து 2 முறை தலா ரூ.20 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கி துரை தன்னிடம் இருந்த கார்டை எடுத்து பார்த்தபோது அது ஈரோட்டை சேர்ந்த நபரின் கார்டு என்பது தெரியவந்தது. உடனே வங்கிக்கு சென்று அங்கிருந்தவர்கள் மூலம் கார்டு உரிமையாளருக்கு போன் செய்தபோது, மர்ம நபர் அந்த கார்டின் உரிமையாளரிடம் இருந்து இதேபோல் கார்டை ஏமாற்றி பறித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபர் குறித்து கடையநல்லூர் போலீசில் இசக்கிதுரை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். கடையநல்லூர் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- ஏ.டி.எம். கார்டை வாங்கி பெண்ணிடம் ரூ.30ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
- பணம் எடுத்து தருவதாக கூறினார்.
மேலூர்
மேலூர் காந்திநகரை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன். இவரது மனைவி வைகை ஜோதி (வயது42). பாலசுப்பிரமணியம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
அவர் அடிக்கடி மனைவிக்கு பணம் அனுப்புவது வழக்கம். அதேபோல் கணவர் பணம் அனுப்பியதால் அதை எடுப்பதற்காக வைகை ஜோதி மேலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். சென்டர் சென்றார். அப்போது அங்கு பணம் எடுக்க பலர் நின்றிருந்தனர். இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் வைகை ஜோதியிடம் பணம் எடுத்து தருவதாக கூறினார்.
அதை நம்பி வைகை ஜோதி அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பின் நம்பரையும் தெரிவித்து ள்ளார். அந்த வாலிபர் பணம் வரவில்லை என்று வேறு கார்டை அவரிடம் மாற்றி கொடுத்து விட்டு வைகை ஜோதியின் ஏ.டி.எம் .கார்டில் இருந்து ரூ.30,ஆயிரம் எடுத்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைகை ஜோதி மேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.
- விருதுநகரில் அரசு அதிகாரியின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் கொள்ளையடித்தனர்.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் என்.ஜி.ஓ.கால னியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது71). இவர் அரசு புள்ளியியல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் சம்பவத்தன்று ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். பணத்தை எடுப்ப தற்கு முன் வரவு-செலவு கணக்கு விபரங்களை சரி பார்க்க நினைத்தார்.
அப்போது அருகில் இருந்த 35வயது மதிக்கத்தக்க 2 பேர் சீனிவாசனிடம் நைசாக பேசி தாங்கள் விபரங்களை எடுத்து தருகிறோம் என கூறி ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி யுள்ளனர். அதன் பின் மர்ம நபர்கள் சீனிவாசனின் ஏ.டி.எம். கார்டை வைத்துக் கொண்டு மற்றொரு ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.
இதை அறியாத சீனிவாசன் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் செலுத்தியபோது ரகசிய குறியீடு எண் தவறு என காட்டப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அது தன்னுடையது இல்லை என சீனிவாசன் உணர்ந்தார். இதற்கிடையே ஏ.டி.எம். கார்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் சீனிவாசன் கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை எடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டி அனுமன் நகரை சேர்ந்தவர் செல்லம்மாள்(வயது38). இவர் 7 வயது பேரனுடன் தெப்பம் கிழக்கு பஜார் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். இவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்துத்தருமாறு கூறினார். அப்போது பேரன் வாந்தி எடுத்துள்ளார். அந்த பெண்ணிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு பேரனை வெளியே அழைத்துச்சென்றார். ஏ.டி.எம். கார்டை திரும்ப பெற மறந்து விட்டார். இந்த நிலையில் அவரது செல்போனுக்கு பணம் எடுக்கப்பட்டதாக 2 முறை குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து செல்லம்மாள் வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது பல தவணைகளில் ரூ.41 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் செல்லம்மாள் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர் தனது கம்பெனிக்காக இடம் பார்த்து வந்துள்ளார்.
- ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயசு 51). இவர் கோணம் பகுதியில் உள்ள வலை கம்பெனியில் மேலாளராக பணி செய்து வருகிறார்.
இவர் தனது கம்பெனிக்காக இடம் பார்த்து வந்துள்ளார். அப்போது தோவாளை 4 வழிச்சாலை அருகே ஒரு இடம் உள்ளதாக தகவல் கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்ட எண்ணை தொடர்பு கொண்ட போது, 4 வழிச்சாலைக்கு வரும் படி கூறி உள்ளனர்.
அதன்பேரில் இடத்தை பார்ப்பதற்காக ரமேஷ் சென்றார். அப்போது அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென ரமேசை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் அவரது கையில் கிடந்த 4 கிராம் மோதிரம் மற்றும் ரூ.6 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் ரமேஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருச்சி அதிகாரியின் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.30 ஆயிரம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்
- அதிகாரி ரங்கநாதன் நினைவூட்டலுக்காக தனது ஏடிஎம் கார்டில் ரகசிய எண்களை எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது
திருச்சி:
சேலம் குமரன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 57). இவர் திருச்சி துவாக்குடி நீர் பாசன மேலாண்மை பயிற்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சேலத்தில் இருக்கும் அவரது தாயாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் அவசர அவசரமாக பஸ்சில் சேலம் புறப்பட்டுச் சென்றார். இந்த அவசரத்தில் ஏ.டி.எம். கார்டு இருந்த கைப்பையை அவர் தொலைத்து விட்டார்.
பின்னர் பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது திருவெறும்பூர் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ.30,000 பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த போலீசார் திருவெறும்பூர் தனியார் வங்கி ஏ.டி.எம். மைய சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து துப்பு துலக்கினர்.
இதில் அதிகாரிக்கு சொந்தமான ஏ.டி.எம். மூலம் ரூ.30,000 திருடிய திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணா நகர் மூன்றாவது தெரு பகுதி சேர்ந்த நாகராஜ் (46) என்பவரை கைது செய்தனர்.
அதிகாரி ரங்கநாதன் நினைவூட்டலுக்காக தனது ஏடிஎம் கார்டில் ரகசிய எண்களை எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனை கொள்ளையன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறான் என போலீசார் தெரிவித்தனர்.
- சாத்தூரில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் திருடினார்.
- இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள வெங்கடாஜலபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் (வயது 49). இவர் சம்பவத்தன்று அருகிலுள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றார்.
அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணத்தை எடுத்துத் தருமாறு கூறியுள்ளார். இதற்காக பாலசுப்ரமணியம் தனது ரகசிய எண்ணையும் அந்த வாலிபரிடம் தெரிவித்துள்ளார்.அந்த வாலிபர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பது போல் பாசாங்கு செய்து உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி பாலசுப்பிரமணியத்திடம் வேறோரு ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் பாலசுப்பிரமணியம் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் எடுத்திருப்பதாக குறுந் தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னிடம் இந்த ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அது அவருடைய ஏ.டி.எம். கார்டு இல்லை என தெரியவந்தது.
இதுகுறித்து பாலசுப்ர மணியம் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபரை வரை தேடி வருகின்றனர்.
- சேலம் மாவட்டத்தை கலக்கிய ஏ.டி.எம். கார்டு கொள்ளையர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 2 பேர் மீது முதியவர்களிடம் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாழப்பாடி:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியை சேர்ந்த சிவானந்தன் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன் (30).
நண்பர்களான இருவரும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு, பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம், பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து, அசல் ஏ.டி.எம். கார்டுகளை வாங்கிக்கொண்டு போலி கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர்.
இருவர் மீதும் கடந்த 2017 மற்றும் 2019ம் ஆண்டு எடப்பாடி பகுதியில், முதியவர்களிடம் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாழப்பாடி பகுதியில் நேற்று வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த இளைஞர்கள் 5 ஆண்டுகளாக ஏடிஎம் பணக் கொள்கையடித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்து 38 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இருவரையும் எடப்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜின்னா (வயது 62). இவர், நேற்று முன்தினம் செய்யாறு டவுன் காசிக்காரத் தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இரவு 7½ மணி அளவில் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டு சரியாக பொருந்தாததால் மீண்டும், மீண்டும் எந்திரத்தில் கார்டினை செலுத்தியுள்ளார்.
அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த 4 பேரில் ஒருவர் ஜின்னாவிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் செலுத்தியபோது வேலை செய்து உள்ளது. இதனையடுத்து அவர், ஜின்னாவிடம் ரகசிய எண்ணை கேட்டார். ஆனால் அவர் அந்த எண்ணை அவரிடம் தெரிவிக்காமல் தானாகவே ரகசிய எண்களை பதிவு செய்தார். இதனை மர்மநபர் கவனித்துள்ளார்.
பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.3 ஆயிரம் எடுத்து கொடுக்கும் போது ஜின்னாவிடம் அவரது ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக வேறு ஒருவரின் கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார். இதனை கவனிக்காமல் அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் இரவு நேரத்தில் ஜின்னாவின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில் வங்கியின் கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் எடுத்துள்ளதாக வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதைத் தொடர்ந்து வங்கியின் ஏ.டி.எம். கார்டினை பார்த்தபோது தன்னுடைய கார்டு இல்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கிக்கு தகவல் கொடுத்து ஏ.டி.எம். கார்டினை செயலிழக்கம் செய்தார். மேலும் இதுகுறித்து ஜின்னா செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகில் உள்ள மேலக்கோவில் பட்டியை சேர்ந்தவர் கண்ணன். கூலிதொழிலாளி. இவரது மனைவி சசிகலா(25). நேற்று மாலை மதுரை மெயின்ரோட்டில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். பணம் எடுப்பது குறித்த தகவல் சரிவர தெரியாததால் அருகில் இருந்த ஒரு வாலிபரிடம் தனது அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது என பார்க்குமாறு கூறியுள்ளார்.
கார்டை வாங்கிய அந்த வாலிபர் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு உங்கள் அக்கவுண்டில் பணம் இல்லை என கூறி சென்றுவிட்டார். அவர் சென்றபிறகு ரூ.20ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக தனது செல்போன் எண்ணுக்கு வந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணத்தை எடுத்தது தேனி மாவட்டம் டி.வாடிப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் கனகராஜ்(30) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்